தக்கைகள் ஒருபொழுதும் அறியாது நீரின் ஆழம்....
ஆம்....இக்கால மனிதர்கள் பெரும்பாலும் உணர்வதில்லை மனிதநேயம்....
இன்றைய மனித உயிரினங்கள் எனும் மனிதர்கள்,
மனிதநேயமிக்க மனிதரை பார்ப்பது கூண்டுக்குள் அடைபட்ட அரிய
விலங்குகளைப் பார்ப்பது போன்ற அதிசய ஆச்சர்ய நிகழ்வாகிவிட்டது...
ஆம் மனிதர்கள் வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்கள்....
இக்காலஓட்டத்தில் அவ்வப்பொழுது........
சாலையில் மக்கள் நெருக்கடி மிகுந்த அந்த அவசரநேரத்தில்
வேகமாக வந்த மாக்ஸி வேன் சடாரென்று நிற்கிறது...
வேனுக்கு இடதுபுறமாக வந்த நான் கண்டகாட்சி
வேனுக்கு முன் ஒரு வயதான மூதாட்டி தலையில் ஒரு மூட்டையும்’
இடுப்பில் ஒரு சுமையுடன் சாலையினை கடக்க
தட்டுதடுமாறி....முயற்சிக்கிறார்...அவர் நிதானமாக சாலையை கடக்கும்
வரை பொறுமையுடன் காத்திருக்கிறார்....வேன் டிரைவர்......அவருக்கு ஒர்
சல்யூட்....பின்னால் அலறும் வாகனங்களுக்கு புரியவில்லை வேன்
நின்ற காரணம்..... நானும் வண்டியை நிறுத்திவிட்டு அந்த மூதாட்டி
சாலையை கடக்கும் வரை காத்திருந்தேன்.... அந்த காத்திருப்பில் பூத்தது
மனதில் ஒர் மட்டற்ற மகிழ்ச்சி....
இரவு நேரத்தில் பேருந்து கிடைக்காமல் அவசரமாக செல்ல வேண்டிய
காரணத்தால் ஆட்டோவில் பயணித்தபோது
திடிரென்று ஆட்டோவை நிறுத்தினார் ஆட்டோ டிரைவர்...
எதிரில் ஒரு விபத்து நடந்திருக்கிறது...மோட்டார் வண்டியில் சென்ற ஒரு
குடும்பத்தலைவர் கிழே விழுந்து எழுந்திருக்கமுடியாமல் மயக்க
நிலையில் கிடக்கிறார்... அருகில் சென்று பார்த்துவிட்டு அவரை
மெதுவாக தூக்கி ஆட்டோவுக்கு கொண்டு வந்து என்னிடம்
”நீங்கள் அவசரமாக செல்ல இருக்கிறீர்கள் என்பது எனக்கு
தெரியும்...இருந்தாலும் இப்போது இவரை
மருத்துவமனைக்கு அழைத்து செல்வது எனக்கு முக்கியம்..
அதனால் நீங்கள் வேறோரு ஆட்டோவை பிடித்து செல்லுங்கள்” என்று
சொன்னார் . நான் அவரிடம் “விபத்தில் அடிப்பட்டிருப்பவர்
உங்களுக்கு தெரிந்தவரா” என்று கேட்டேன்.... அதற்கு டிரைவர்
அடிபட்டவர் யாரென்று தனக்கு தெரியாது....ஆபத்து நேரத்தில்
தெரிந்தவராய் இருந்தால் மட்டும் தான் உதவ வேண்டுமா என்ன என்று
கேட்டவாரே ஆட்டோவை கிளப்பி ஆஸ்பத்திரிக்கு சென்றுவிட்டார்.....
அவருக்கு ஒரு சல்யூட்.....அன்று 5 கிமி நடந்தே வீட்டுக்கு சென்றதில்
எனக்கு களைப்பே தெரியவில்லை....
மனதில் அப்படி ஒரு சுகம் அன்று அந்த மனிதனைக் கண்டதில்.....
பேருந்தில் நின்று பயணிக்கும் கர்ப்பினி பெண்ணுக்கு, கைக்குழந்தையை
சுமந்து நின்று பயணிக்கும் மகளிருக்கு, வயதான முதியவர்களுக்கு
எழுந்து நின்று இடமளித்து உதவும் அனைத்து பேருள்ளங்களுக்கும்
ஒரு சல்யூட்...
இப்படி சின்ன சின்ன விஷயத்தில் தான் சுயநலமில்லாத மனிதம்
வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது...நான் கண்ட வரையில்.....
ரொம்ப நாள் கழித்து சந்தித்த நண்பன்
“வாழ்க்கை எப்படிப்போகிறது” என்று கேட்டான்..
நேற்று சரவணபவனில் பெரிய தோசை வேண்டும் என்று
அடம்பிடித்து வாங்கிச்சாப்பிடமுடியாமல் முழித்துக்
கொண்டிருந்த சிறுமியைப்பற்றிச் சொன்னேன்...
“அப்புறம் பார்க்கலாம்” என்று சொல்லி சென்று விட்டான்....
என்னிடம் பெரிதாக எதேனும் எதிர்பார்க்கிறார்களா!!??......