கிளிக்... கிளிக்... கிளிக்...

Tuesday, November 29, 2011

தக்கைகள்....இப்படித்தான் பலர்.....





தக்கைகள் ஒருபொழுதும் அறியாது நீரின் ஆழம்....




ஆம்....இக்கால மனிதர்கள் பெரும்பாலும் உணர்வதில்லை மனிதநேயம்....


இன்றைய மனித உயிரினங்கள் எனும் மனிதர்கள், 


மனிதநேயமிக்க மனிதரை பார்ப்பது கூண்டுக்குள் அடைபட்ட அரிய 


விலங்குகளைப் பார்ப்பது போன்ற அதிசய ஆச்சர்ய நிகழ்வாகிவிட்டது...


ஆம் மனிதர்கள் வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்கள்....


இக்காலஓட்டத்தில் அவ்வப்பொழுது........ 


சாலையில் மக்கள் நெருக்கடி மிகுந்த அந்த அவசரநேரத்தில்


வேகமாக வந்த மாக்ஸி வேன் சடாரென்று நிற்கிறது...


வேனுக்கு இடதுபுறமாக வந்த நான் கண்டகாட்சி


வேனுக்கு முன் ஒரு வயதான மூதாட்டி தலையில் ஒரு மூட்டையும்’


இடுப்பில் ஒரு சுமையுடன் சாலையினை கடக்க 


தட்டுதடுமாறி....முயற்சிக்கிறார்...அவர் நிதானமாக சாலையை கடக்கும் 


வரை பொறுமையுடன் காத்திருக்கிறார்....வேன் டிரைவர்......அவருக்கு ஒர்


சல்யூட்....பின்னால் அலறும் வாகனங்களுக்கு புரியவில்லை வேன் 


நின்ற காரணம்..... நானும் வண்டியை நிறுத்திவிட்டு அந்த மூதாட்டி 


சாலையை கடக்கும் வரை காத்திருந்தேன்.... அந்த காத்திருப்பில் பூத்தது


மனதில் ஒர் மட்டற்ற மகிழ்ச்சி....










இரவு நேரத்தில் பேருந்து கிடைக்காமல் அவசரமாக செல்ல வேண்டிய 


காரணத்தால் ஆட்டோவில் பயணித்தபோது


திடிரென்று ஆட்டோவை நிறுத்தினார் ஆட்டோ டிரைவர்...


எதிரில் ஒரு விபத்து நடந்திருக்கிறது...மோட்டார் வண்டியில் சென்ற ஒரு 


குடும்பத்தலைவர் கிழே விழுந்து எழுந்திருக்கமுடியாமல் மயக்க 


நிலையில் கிடக்கிறார்... அருகில் சென்று பார்த்துவிட்டு அவரை 


மெதுவாக தூக்கி ஆட்டோவுக்கு கொண்டு வந்து என்னிடம் 


”நீங்கள் அவசரமாக செல்ல இருக்கிறீர்கள் என்பது எனக்கு 


தெரியும்...இருந்தாலும் இப்போது இவரை 


மருத்துவமனைக்கு அழைத்து செல்வது எனக்கு முக்கியம்..


அதனால் நீங்கள் வேறோரு ஆட்டோவை பிடித்து செல்லுங்கள்” என்று 


சொன்னார் . நான் அவரிடம் “விபத்தில் அடிப்பட்டிருப்பவர் 


உங்களுக்கு தெரிந்தவரா”  என்று கேட்டேன்.... அதற்கு டிரைவர் 


அடிபட்டவர் யாரென்று தனக்கு தெரியாது....ஆபத்து நேரத்தில் 


தெரிந்தவராய் இருந்தால் மட்டும் தான் உதவ வேண்டுமா என்ன என்று 


கேட்டவாரே ஆட்டோவை கிளப்பி ஆஸ்பத்திரிக்கு சென்றுவிட்டார்.....


அவருக்கு ஒரு சல்யூட்.....அன்று 5 கிமி நடந்தே வீட்டுக்கு சென்றதில் 


எனக்கு களைப்பே தெரியவில்லை....


மனதில் அப்படி ஒரு சுகம் அன்று அந்த மனிதனைக் கண்டதில்.....


பேருந்தில் நின்று பயணிக்கும் கர்ப்பினி பெண்ணுக்கு, கைக்குழந்தையை 


சுமந்து நின்று பயணிக்கும் மகளிருக்கு, வயதான முதியவர்களுக்கு 


எழுந்து நின்று இடமளித்து உதவும் அனைத்து பேருள்ளங்களுக்கும் 


ஒரு சல்யூட்...


இப்படி சின்ன சின்ன விஷயத்தில் தான் சுயநலமில்லாத மனிதம்


வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது...நான் கண்ட வரையில்.....


ரொம்ப நாள் கழித்து சந்தித்த நண்பன்


“வாழ்க்கை எப்படிப்போகிறது” என்று கேட்டான்..


நேற்று சரவணபவனில் பெரிய தோசை வேண்டும் என்று


அடம்பிடித்து வாங்கிச்சாப்பிடமுடியாமல் முழித்துக் 


கொண்டிருந்த சிறுமியைப்பற்றிச் சொன்னேன்...


“அப்புறம் பார்க்கலாம்” என்று சொல்லி சென்று விட்டான்....


என்னிடம் பெரிதாக எதேனும் எதிர்பார்க்கிறார்களா!!??......

Monday, November 21, 2011

ப்ப்ப்போலிஸ்...ப்ப்போலிஸ்...ப்போலிஸ்...

இப்பதிவின் நாயகன் நகைச்சுவைக்காவலனுக்கு நன்றி அட அதாங்க சிரிப்பு போலிஸ்


இப்பதிவில் வரும் சம்பவங்கள் யாவும் கற்பனையே.....யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் பதியப்பட்டதல்ல...அப்படி புண்பட்டுச்சின்னா ஓசியில போலிஸிக்கு தோசை போட்டா புண்ணு சரியாயிடுன்னு டெரர் பாண்டி சுவாமிகள் போ(தை)தனைகள் மூலமா அல்லாரும் தெரிஞ்சிக்கலாம்.


பன்னிக்குட்டியோட அல்லக்கை என்ற பெருமை பெற்ற சி.போலிஸ் அண்ணன்
ராக்கெட் ராஜாவைவிட சத்தியமா ரொம்ப ரொம்ப நல்லவராம்....... 



சி.போலிஸோட பதிவ படிச்ச பலபேர் பேக்கு கணக்கா பீச்சில பரதேசியா
திரியறதா நம்ம பன்னிக்குட்டி அண்ணன் ரொம்ப பெருமையா பரையரார்...


”டவுசரு...அதுக்காக இந்தப்பதிவுல போலிஸைக் கூட்டிட்டு வந்து இப்படியா கலவரப்படுத்துவ” அப்படின்னு கேக்காதிங்க....


நம்ம போலிஸ் டெரரையே ரொம்ப டெரராக்குன இரகசிய திகில்கதை இப்ப இந்த வினாடிதான் இனணயத்துல வெளியாகியிருக்கிறது....அதனாலதான்...


நள்ளிரவு கடந்த பொழுதில் “ஹோ...ஹோ” வெனக் காற்றும் அலையும் மாறி மாறி சுருதி சேர்த்துக்கொண்டிருந்த மெரினா பீச், உலகின் இரண்டாவது பெரிய கடற்கரையை டெரர் பாராக மாற்றி இருந்த நேரம்...


இரவு உறக்கம் வராமல் ஓசியில் ஏதாச்சும் கிடைக்குமா என்று அங்கு வந்ஹ சி.போலிஸிடம் வகையாக சிக்கிக்கொண்டார் டெரர்...


மணலில் சில பீர் பாட்டில்கள் அரைகுறையாக புதைந்திருந்ததைப்பாத்த நமம போலிஸ்...


”என்னா மாப்ளே என்னைய விட்டுட்டு நீ மட்டும் தனியா கச்சேரி ஆரம்பிச்சிட்டியே”


“நான் என்ன பண்றது! உன் டப்பா போனை மாத்துன்னு கரடியாக் கத்தினாலும் கேக்குறியா நீ?...நாட் ரீச்சபிள், பிஸி, சுவிச்ட் ஆஃப்னு என்னன்னவோ வருது...ஆமா நீ கொடுத்த நம்பர் கரக்டானா நம்பர்தானா?...”


“என்னடா ஏதாச்சும் பிரச்சனையா?”


”பின்ன என்ன... நானே பாதி போதையில குத்துமதிப்பா தடவிதடவி உன் நம்பர டயல் பண்ணா பன்னிக்குட்டி பேசறாரு ...நானும் போதையில நீதான்னு நினைச்சிக்கிட்டு எதேதோ உளரிட்டேன்...இப்பதான் பன்னிக்குட்டி இங்க வந்து பாதியே பார்சல் பண்ணிட்டு போயிடுச்சி...இருக்குற பாதியையாச்சும் ஒருகை பாத்துரலாம்னு நினைச்சிட்டிருந்தா பாவி.. நீ வந்துட்டியே? இனி நான் குடிச்சாப்பல தான்... ”


“என்ன பாதி போயிருச்சா! ஆ வட போச்சே!”


“ஏண்டா ஒசின்னா இப்படி அலையுறே!”


“பாண்டி...வாழ்கையில சில வாய்ப்புகள் வரும்.
சில வாய்ப்புகள் வாழ்க்கையே தரும்’இதான் நம்மளோட ஓசிபாலிஸி”


“த்தூ... நாதாரி...ஓசியில வாங்கித்தின்றதுக்கு சொல்ற காரணத்த பாரு”


“வழக்கமா எல்லாரும் உன்னைத்தான் காறித்துப்புவாங்க இப்ப நீ என்னைப் பாத்து துப்புறீயா...கீப் இட் அப்”


“அதுக்கு ஏண்டா என் முதுகில தட்டுறே”


“மத்தவங்க முதுகுக்குப் பின்னால நாம செய்ய வேண்டியதே தட்டிக்கொடுப்பது தான் என் அருமை டெரர் நண்பா”


டெரர் டெரராகி பீர் பாட்டில எடுத்து வாய்ல வைக்கலாம்னு பாத்தா பாட்டில் காலி.....
”டேய் எப்படா இதையெல்லாம் காலிபண்ணே...நாயே....நீ தத்துவமா பேசும்போதே நான் உஷாராயிருக்கனும்.”


ரொம்ப செம டென்ஷனா இருக்கிற டெரரைப்பாத்து...போலிஸ் “நண்பா நான் வாழ்க்கையில எப்ப அதிகமா பூரிப்படைவேன் தெரியுமா”


கர்ர்ர்ர்... “ தெரியாது சொல்லு”


“ம்ம்ம் பூரி மசாலா சாப்பிடும்போதுதான்....
 யாராச்சும் சும்மா வாங்கித்தருவாங்களா...பாஸ்ஸ்ஸ்ஸ்ஸ்”


அன்றையிலிருந்து டெரருக்கு பீரைப் பாத்தா பூரி மாதிரி தெரியுதாம்....பூரியைப்பாத்த பீர் மாதிரி தெரியுதாம்....


வாழ்க ஓ சி. போலிஸ்.....வளர்க...அவர் (ஓசி)தொண்டு...