கிளிக்... கிளிக்... கிளிக்...

Sunday, January 08, 2012

தானே புயல்...காற்று சுனாமி....

சென்ற பதிவில் தானே புயல் தமிழகத்தை தாக்க வந்துகொண்டிருப்பதை


குறிப்பிட்டிருந்தேன்...




எங்கள் கடலூர் இருளில் இந்த புத்தாண்டை ஆரம்பிக்க 


வழிவகை செய்த தானே புயல்...


எப்போதும் போல வரும் சாதாரண புயல்தானே 

என்று நினைத்திருந்தேன்....

135கி.மி.....வேகத்தில்....புயல் அடித்த அக்கணம்.....

ஊ....ஊ....ஊ....என ஒரே சத்தம்.....

டம டம என்று காற்றில் அடித்த கூரைகள் பிய்த்துக் கொண்டு போனது...

வானத்தை நோக்கியே பார்த்துக்கொண்டிருந்த 

எங்கள் கடலூர் மரங்களை தானே புயல் 

தரையை பார்க்க வைத்து சாதனை புரிந்த்து.....

கடலூர் கம்மியம் பேட்டையில் உள்ள புனித வளனார் தேவாலயத்தின்

கோபுரத்தைத் தினமும் பள்ளி செல்லும் போது தவறாமல் பார்ப்பேன்...

என்னளவில் 30 வருடங்களாக நான் பார்த்த அந்த இமாலய கோபுரத்தை

இன்று தானே புயல் தரையோடு சாய்த்துவிட்டது....

எண்ணற்ற முந்திரி மரங்கள்..... 

பலா மரங்கள்.....பரலோகம் போய்விட்டன...

இந்நிலையில் எந்த புண்ணியவானோ பூகம்பம் வரப்போகிறது என்ற

வதந்தியை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல பரப்பிவிட்டான்...

காட்டுத்தீ போல பரவிய இந்த வதந்தியினால் இரவு 12 மணிக்கு 

தத்தம் குழந்தைகளோடு வீட்டைவிட்டு வெளிவந்த மக்கள் மறுநாள்

காலை 7 மணிக்குத்தான் வீட்டிற்குள் சென்றார்கள்...  

இது ஒரு வதந்தி என்று அனைத்து தொலைக்காட்சிகளிலும்

ஃப்ளாஷ் நியூஸ் போட்டு என்ன ப்ரயோஜனம்...

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அது 

போய் சேர வாய்ப்பில்லாமல் போய்விட்டதே...

காரணம் மின்சாரம் இல்லை...

மருத்துவமனைகளில் மின்சாரம் இல்லாத 

காரணத்தால்....நோயாளிகள்...முக்கியமாக 

கர்ப்பினிப் பெண்கள் பட்ட அவஸ்தையினை எழுதுவது 

என்பது என்னால் இயலாது.... 

குடிக்க குடிநீர்....புழங்குவதற்கு தண்ணீர் கிடைக்கவில்லை......

சென்ற வருடம் டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி

 இரவில் கடைசியாக எரிந்த என்வீட்டின் மின்விளக்கு 

இன்றளவும் ஒளிரவில்லை....செல்போன் சார்ஜ் போட கூட இயலாததால் 

யாரையும் அவசரத்துக்கு தொடர்பு கொள்ள கூட முடியவில்லை....   

தொலைக்காட்சி மற்றும் செய்திதாள்களில் தினமும் 

கடலூர் தலைப்பு செய்தியாகிவிட்டது...

ஆதிகாலம் இரவில் எப்படி இருந்திருக்கும் என்பதை

தானே புயல் எங்களுக்கு வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது...

எதிர்பாராமல் வந்த இயற்கை சீற்றமான இந்த

தானே புயலின் இரண்டு மணிநேர கோரதாண்டவத்தினால் ஏற்பட்ட 

இழப்பில இருந்து கடலூர் மீள இன்னும் 

எத்தனை ஆண்டுகள் ஆகும்??????????