கிளிக்... கிளிக்... கிளிக்...

Monday, November 21, 2011

ப்ப்ப்போலிஸ்...ப்ப்போலிஸ்...ப்போலிஸ்...

இப்பதிவின் நாயகன் நகைச்சுவைக்காவலனுக்கு நன்றி அட அதாங்க சிரிப்பு போலிஸ்


இப்பதிவில் வரும் சம்பவங்கள் யாவும் கற்பனையே.....யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் பதியப்பட்டதல்ல...அப்படி புண்பட்டுச்சின்னா ஓசியில போலிஸிக்கு தோசை போட்டா புண்ணு சரியாயிடுன்னு டெரர் பாண்டி சுவாமிகள் போ(தை)தனைகள் மூலமா அல்லாரும் தெரிஞ்சிக்கலாம்.


பன்னிக்குட்டியோட அல்லக்கை என்ற பெருமை பெற்ற சி.போலிஸ் அண்ணன்
ராக்கெட் ராஜாவைவிட சத்தியமா ரொம்ப ரொம்ப நல்லவராம்....... 



சி.போலிஸோட பதிவ படிச்ச பலபேர் பேக்கு கணக்கா பீச்சில பரதேசியா
திரியறதா நம்ம பன்னிக்குட்டி அண்ணன் ரொம்ப பெருமையா பரையரார்...


”டவுசரு...அதுக்காக இந்தப்பதிவுல போலிஸைக் கூட்டிட்டு வந்து இப்படியா கலவரப்படுத்துவ” அப்படின்னு கேக்காதிங்க....


நம்ம போலிஸ் டெரரையே ரொம்ப டெரராக்குன இரகசிய திகில்கதை இப்ப இந்த வினாடிதான் இனணயத்துல வெளியாகியிருக்கிறது....அதனாலதான்...


நள்ளிரவு கடந்த பொழுதில் “ஹோ...ஹோ” வெனக் காற்றும் அலையும் மாறி மாறி சுருதி சேர்த்துக்கொண்டிருந்த மெரினா பீச், உலகின் இரண்டாவது பெரிய கடற்கரையை டெரர் பாராக மாற்றி இருந்த நேரம்...


இரவு உறக்கம் வராமல் ஓசியில் ஏதாச்சும் கிடைக்குமா என்று அங்கு வந்ஹ சி.போலிஸிடம் வகையாக சிக்கிக்கொண்டார் டெரர்...


மணலில் சில பீர் பாட்டில்கள் அரைகுறையாக புதைந்திருந்ததைப்பாத்த நமம போலிஸ்...


”என்னா மாப்ளே என்னைய விட்டுட்டு நீ மட்டும் தனியா கச்சேரி ஆரம்பிச்சிட்டியே”


“நான் என்ன பண்றது! உன் டப்பா போனை மாத்துன்னு கரடியாக் கத்தினாலும் கேக்குறியா நீ?...நாட் ரீச்சபிள், பிஸி, சுவிச்ட் ஆஃப்னு என்னன்னவோ வருது...ஆமா நீ கொடுத்த நம்பர் கரக்டானா நம்பர்தானா?...”


“என்னடா ஏதாச்சும் பிரச்சனையா?”


”பின்ன என்ன... நானே பாதி போதையில குத்துமதிப்பா தடவிதடவி உன் நம்பர டயல் பண்ணா பன்னிக்குட்டி பேசறாரு ...நானும் போதையில நீதான்னு நினைச்சிக்கிட்டு எதேதோ உளரிட்டேன்...இப்பதான் பன்னிக்குட்டி இங்க வந்து பாதியே பார்சல் பண்ணிட்டு போயிடுச்சி...இருக்குற பாதியையாச்சும் ஒருகை பாத்துரலாம்னு நினைச்சிட்டிருந்தா பாவி.. நீ வந்துட்டியே? இனி நான் குடிச்சாப்பல தான்... ”


“என்ன பாதி போயிருச்சா! ஆ வட போச்சே!”


“ஏண்டா ஒசின்னா இப்படி அலையுறே!”


“பாண்டி...வாழ்கையில சில வாய்ப்புகள் வரும்.
சில வாய்ப்புகள் வாழ்க்கையே தரும்’இதான் நம்மளோட ஓசிபாலிஸி”


“த்தூ... நாதாரி...ஓசியில வாங்கித்தின்றதுக்கு சொல்ற காரணத்த பாரு”


“வழக்கமா எல்லாரும் உன்னைத்தான் காறித்துப்புவாங்க இப்ப நீ என்னைப் பாத்து துப்புறீயா...கீப் இட் அப்”


“அதுக்கு ஏண்டா என் முதுகில தட்டுறே”


“மத்தவங்க முதுகுக்குப் பின்னால நாம செய்ய வேண்டியதே தட்டிக்கொடுப்பது தான் என் அருமை டெரர் நண்பா”


டெரர் டெரராகி பீர் பாட்டில எடுத்து வாய்ல வைக்கலாம்னு பாத்தா பாட்டில் காலி.....
”டேய் எப்படா இதையெல்லாம் காலிபண்ணே...நாயே....நீ தத்துவமா பேசும்போதே நான் உஷாராயிருக்கனும்.”


ரொம்ப செம டென்ஷனா இருக்கிற டெரரைப்பாத்து...போலிஸ் “நண்பா நான் வாழ்க்கையில எப்ப அதிகமா பூரிப்படைவேன் தெரியுமா”


கர்ர்ர்ர்... “ தெரியாது சொல்லு”


“ம்ம்ம் பூரி மசாலா சாப்பிடும்போதுதான்....
 யாராச்சும் சும்மா வாங்கித்தருவாங்களா...பாஸ்ஸ்ஸ்ஸ்ஸ்”


அன்றையிலிருந்து டெரருக்கு பீரைப் பாத்தா பூரி மாதிரி தெரியுதாம்....பூரியைப்பாத்த பீர் மாதிரி தெரியுதாம்....


வாழ்க ஓ சி. போலிஸ்.....வளர்க...அவர் (ஓசி)தொண்டு...



21 comments:

Unknown said...

\\என் ப்ளாக் படிக்கிறவன் மகாராஜா ஆவான்\\

போலிஸ்..போலிஸ்...நான் ஏன் மன்னனா ஆனேன்னு இப்பதான் என் மரமண்டைக்கு புரியுது..

நாய் நக்ஸ் said...

உண்மைஎலேயே இவங்க குடிச்சது பீர்-ஆ...இல்லை பாலிடால்-ஆ ?????

Unknown said...

@NAAI-NAKKS

//உண்மைஎலேயே இவங்க குடிச்சது பீர்-ஆ...இல்லை பாலிடால்-ஆ ?????//

fwd to பன்னிக்குட்டி,டெரர் பாண்டி & சிரிப்பு போலிஸ்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஏரா mannanukku போதை ஏறிடுச்சு போல :))

Unknown said...

@சிரிப்பு போலிஸ்....

சிரிப்பு போலிஸ்..சிரிப்புபோலிஸாத்தான் இருக்கணும்...
ஹி..ஹி..சீரியஸ் போலிசாகக்கூடாது....

வெளங்காதவன்™ said...

சார்... டெரர் சாரை(???) இழிவு படுத்திப் பேசியதால்.......
நான் வெளிநடப்பு செய்கிறேன்.......
#யோவ் போலீசு... நீ வாங்குற அஞ்சு பத்துக்கு இந்தப் பொழப்பு தேவையா?

TERROR-PANDIYAN(VAS) said...

@வெளங்காதவன்

//சார்... டெரர் சாரை(???) இழிவு படுத்திப் பேசியதால்.......
நான் வெளிநடப்பு செய்கிறேன்.......//

உனக்கு போதைக்கு நான் ஊருக்காவா... :)

TERROR-PANDIYAN(VAS) said...

// OpenID
பெயர்/URL
பெயரில்லா //

அண்ணே!! மூனாவதா இருக்க ஸ்பெல்லிங் சரியா.. :)

வெளங்காதவன்™ said...

//ஊருக்காவா... :) ///

வெளக்கவும் மிஸ்டர் டெரர்.....

:)

Mohamed Faaique said...

பூரி மசாலா சாப்ட்ட்டாபூரிப்படைவாரா???
ஆப்போ, குருவி ரொட்டி சாப்டா?? குருவி ஆவாரா??? - டவுட்டு....

Mohamed Faaique said...

///மத்தவங்க முதுகுக்குப் பின்னால நாம செய்ய வேண்டியதே தட்டிக்கொடுப்பது தான்///

இது செம...

MANO நாஞ்சில் மனோ said...

எலேய் பன்னிகுட்டி பீர் குடிக்கமாட்டார் ஒன்லி பக்கார்டிதான் தெரியும்தானே ஹி ஹி...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

// OpenID
பெயர்/URL
பெயரில்லா //

அண்ணே!! மூனாவதா இருக்க ஸ்பெல்லிங் சரியா.. :)//

நீ நடத்து ராசா...என் பிளாக்குக்கு மட்டும் வந்து கமென்ட் போட்றாத :))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

NAAI-NAKKS சொன்னது…

உண்மைஎலேயே இவங்க குடிச்சது பீர்-ஆ...இல்லை பாலிடால்-ஆ ?????//

வர வர பாலிடால் டேஸ்ட்டாவே இல்லை :((

Unknown said...

@ வெளங்காதவன் கூறியது...
||சார்... டெரர் சாரை(???) இழிவு படுத்திப் பேசியதால்.......
நான் வெளிநடப்பு செய்கிறேன்.......//

நீங்க ஒருத்தர் இருக்கிறது எனக்கு வெளங்கலை.... அதான்..கோச்சிக்காதிங்க...

Unknown said...

@TERROR-PANDIYAN(VAS) கூறியது...
// OpenID
பெயர்/URL
பெயரில்லா //

அண்ணே!! மூனாவதா இருக்க ஸ்பெல்லிங் சரியா.. :)//

டெரர் அண்ணே என்னண்ணே கேக்குற?
என்னத்த கேக்குற?
ஒன்னும் வெளங்கலையே...போலிசுக்கு புரிஞ்சிடுச்சி போல...

Unknown said...

@Mohamed Faaique சொன்னது…
\\பூரி மசாலா சாப்ட்ட்டாபூரிப்படைவாரா???
ஆப்போ, குருவி ரொட்டி சாப்டா?? குருவி ஆவாரா??? - டவுட்டு....//

ஆங்...குட்டிசுவரா போவாரு......

Unknown said...

@MANO நாஞ்சில் மனோ சொன்னது…
எலேய் பன்னிகுட்டி பீர் குடிக்கமாட்டார் ஒன்லி பக்கார்டிதான் தெரியும்தானே ஹி ஹி...//

ஹி...ஹி...எனக்கு எப்படிண்ணே தெரியும்...பகார்டில உங்களுக்கும் பங்கு கிடைக்குமாண்ணே...

Unknown said...

@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
வர வர பாலிடால் டேஸ்ட்டாவே இல்லை :((//

யோவ் போலிஸு நீ பாலிடால் சாப்பிட்டா, பாலிடால் பாய்ஸன் சாப்பிட்டமாதிரி.....அதான் டேஸ்டா இல்ல உமக்கு...

செல்வா said...
This comment has been removed by the author.
செல்வா said...

// அன்றையிலிருந்து டெரருக்கு பீரைப் பாத்தா பூரி மாதிரி தெரியுதாம்....பூரியைப்பாத்த பீர் மாதிரி தெரியுதாம்....//.

பாவம்ல :(((