Publish Post
இராஜாதிராஜ ராஜ மார்த்தாண்ட.......ஏமரா மன்னர் பராக் பராக்
“வணக்கம் மன்னா”
“ம்ம் வணக்கம் மங்குனியாரே”
“ம் அப்புறம் வேறன்ன செய்தி மன்னா?”
”ஏதேது இங்கு நான் மன்ன்னா இல்லை நீர் மன்னனா?”
ம்ம்க்கும் இதுல ஒன்னும் குறைச்சல் இல்லை....என்றெண்ணியபடியே
“மன்னியுங்கள் மன்னா எனக்கு ஒரு சந்தேகம் மன்னா?”
“சொல் மங்குனி என்ன சந்தேகம் உனக்கு?”
”இல்லை மன்னா... வந்து.. இன்றைய அரசியல் நிகழ்வுகள் சரித்திர பாடமானால் எப்படி இருக்கும் மன்னா?”
”அசோகர் குளம் வெட்டினார்....அக்பர் கிணறு வெட்டினார்....
என்பதற்கு பதிலாக அந்த தலைவர் அவரை வெட்டினார்....இந்த தலைவர் இவரை வெட்டினார்...அவர் இவ்வளவு கோடி ஊழல் செய்து நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார்...இவர் அவரை மிஞ்சும் அளவுக்கு ஊழலில் கின்னஸ் சாதனை செய்து நாட்டிற்கு நல்லது செய்தார்.... என்றல்லவா படிப்பார்கள்...”
“ஆம் மன்னா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை...ம்ம் அப்புறம்”
“மங்குனி நேற்று இரவு ஒன்பது மணிக்கு முக்கியவீதியில் இருசக்கர வாகனத்தில் நகர் வலம் சென்று கொண்டிருக்கும் போது...”
இடைமறித்து மங்குனி “இரவில் அதுவும் இருசக்கரவாகனத்தில் உங்களுக்கு அப்படி என்ன நகர்வலம் வேண்டிக்கிடக்கு வெட்டிமன்னா?”
“ இல்லை மங்குனியாரே வெட்டியாக பொழுது போக்குவதால் உடல் பருத்துவிட்டதல்லவா அதனால் உடல் எடை குறைய இருசக்கர வாகனத்தில் வாக்கிங் சென்றேன் மங்குனி...இப்போது விசயம் அதுவல்ல மங்குனி..”
”வேறென்ன மன்னா?”
“நகர்வலத்தின்போது எதிரில் சிறிது தொலைவில் ஒரு இருசக்கரவாகனத்தில் மூன்று மானிடர்கள் மிக வேகமாக பயணித்து வந்தார்கள்?”
”என்ன ஒரு இருசக்கர வாகனத்தில் மூன்று மானிடர்களா...மிகவும் கண்டிக்கத்தக்க ஒரு செயல் இது மன்னா...அப்புறம் என்ன நடந்தது மன்னா?”
“மிக வேகமாக அவர்கள் வந்து கொண்டிருக்கும் போது திடிரென்று ஒரு நாய் வீதியின் குறுக்காக பாய்ந்து வந்துவிட்டது.....நாயின் மீது மோதிய வேகத்தில் அப்படியே அந்த வண்டி கிழே சாய்ந்து கீரிச் என வீதியில் ஐந்தாறு முறை சுழன்றபடியே ஒரு ஓரத்தில் வந்து விழுந்தது....நல்ல வேளை வாகனத்தில் வந்த மூவருக்கும் பலமாக அடிபடவில்லை....சிறிய சிராய்ப்புகள்தான்...ஆனால் வாகனத்தின் அடியில் சிக்கியிருந்த அந்த நாய் அலறமுடியால் அலறிக்கொண்டிருந்தது.
ஒடிவந்து வண்டியை அவர்கள் தூக்கமுற்படும் போது பார்த்தால் நாயின் ஒரு கால்
வாகனத்தில் மாட்டிக் கொண்டிருந்தது. ஒருவழியாக முயற்சி செய்து வாகனத்தை பக்குவமாக தூக்கி அந்நாயின் காலை விடுவித்து கவனித்தபோது தான் தெரிந்தது...அந்த நாயின் நான்கு கால்களும் நான்குதிசையில் மடங்கி செயலிழந்து கிடந்தன...அதனால் எழுந்திருக்கவே முடியவில்லை...சத்தம்போட்டு அலறகூடமுடியவில்லை....நல்ல பலமான அடி....காரணம்..விபத்தின்போது அந்த நாய் வாகனத்தின் அடியில் மாட்டிக்கொண்டு தரையில் தேய்த்தபடி வாகனத்துடன் சுழன்று வந்துள்ளது. நாயின் அருகில் சென்று அதனை தூக்க ஒருவர் முன்வந்தார், ஆனால் அவரும் தயக்கத்துடன் நின்று விட்டார். ஏனென்றால் நாய் தனக்கு உதவி செய்ய வருகிறார் என்றா அக்கணத்தில் நினைக்கும்...தன்னை மேலும் துன்புறுத்த வந்துள்ளார் என்றெண்ணி நாய் திடிரென அவரை கடித்துவிட்டால் என்ன செய்வது?
ஆனால் வாயில்லா அந்த நாய் பட்ட வேதனை வெறும் வார்த்தைகளால் சொல்லி மாளாது மங்குனி...அதற்கு அந்த நாய் இறந்தே இருக்கலாம்...ம்ம்ம் இதை அதனுடைய கெட்ட நேரம் என்று சொல்வதா..இல்லை வாகனத்தில் வந்தவகளுடைய நல்ல நேரம் என்றுசொல்வதா.....யார்மீது குற்றம்....வேகமாக வந்த அந்த மானிடர்கள் குற்றமா....அல்ல திடிரென குறுக்காக பாய்ந்த அந்நாயின் குற்றமா....
பொதுவாக பகலில் பல நாய்கள் நிதானமாக வீதியை சர்வ எச்சரிக்கையோடு கடந்து செல்வதை நான் பார்த்திருக்கிறேன்... ஆனால் நடுநிசியில் அதே நாய்கள்
ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில் வீதியை கடக்கின்றன...
அப்படி நடு நிசியில் வீதியைக் கடக்க முயலும் நாய்கள் லாரி போன்ற வாகனத்தில் அடிபட்டு நாதியற்று நசுங்கி சாகின்றன....அந்த நடு நிசி நாய்களுக்கு என்று விடிவு காலம் பிறக்குமோ.....ஆண்டவன் தான் அருள்புரிய வேண்டும்...மங்குனி....”
“மன்னா இது உங்களுக்கே சற்று ஓவராக தெரியவில்லை...அவனவன் மனிதன் கொல்லப்படுவதுக்கே மருகுவதில்லை...ஈழத்தில் நம் சகோதர சகோதரிகளூக்கு எவ்வளவோ கொடுமை நடந்திருக்கிறது..அதனையே எவனும் கண்டுகொள்ளவில்லை...இதற்குபோய் கவலைப்பட்டு ஒரு பதிவையே வீணாக்கிவிட்டிர்களே மன்னா...நான் கூட தான் நேற்றைய நடு நிசியில் வீதியில் சண்டையிட்டுக் கொண்டிருந்த நாய்களிடம் சிக்கிவிட்டேன்...அதில் ஒரு நாய் என்ன நினைத்த்தோ தெரியவில்லை திடிரென்று ஓடிவந்து என்காலை கவ்வி விட்டது இதற்கென்ன சொல்லப்போகிறீர்கள் என் மட மன்னா?”
”ஒ அப்படியா சொல்லவேல்ல...இது எப்போ நடந்தது என் மங்குனி அமைச்சா? உன்னைப்பாத்தா சும்மா படுத்துறங்கும் நாய்கூடபாய்ந்து வந்து குதறுமே..பரவாயில்லை காலை கவ்வியதோடு விட்டதே...ஏதோ நாய் நல்லமூடில் சண்டை போட்டிருக்கும் போல அதான் காலைக் கவ்வியதோடு உன்னை விட்டுவிட்டது மங்குனி”
“மன்னா...போதும்...இதற்கு நான் அந்த நாயிடமே கடிபட்டிருக்கலாம் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...”