கிளிக்... கிளிக்... கிளிக்...

Wednesday, October 05, 2011

கொசுவத்தி மேல் கொசு























என்னுடைய தர்பார்ல வர வர இந்த 
கொசுத்தொல்லை தாங்க முடியிலப்பா....
கொசுவத்தி மேலேயே வந்து உட்கார அளவுக்கு
அதுகளுக்கு தைரியம் வந்துடுச்சு....
பரவாயில்ல மங்குனி அமைச்சர் இருக்கிற வரைக்கும்
எனக்கு கவலையில்லை.. ஆனா மங்குனிய கொஞ்ச நாளா
ஆளையே காணோமே.....
யாரங்கே.....மங்குனி எங்கே....
அவர் வெங்கட் தொல்லை தாங்கமுடியாம முந்திரிகாட்டுக்கு
தவம் புரிய சென்றுவிட்டார் மன்னா
* * * * * * * * * * * * * * * *

கடவுள்: “மங்குனி உன் தவத்தை கண்டு மெச்சினேன்.
         என்ன வரம் வேண்டும்...  கேள்!

மங்குனி: “என்னோட வீட்ல இருந்து சொர்க்கத்துக்கு
          ரோடு போட்டு கொடுங்க சாமி!

கடவுள்: “அது முடியாது. வேறு வரம் கேள் மங்குனி!

மங்குனி: “இந்த வெங்கட் அவரோட ப்ளாக்ல அடிக்கற லொள்ளு
           என்னால தாங்கமுடியில சாமி!..மேலும் என்னை பயங்கரமாக கலாய்க்கிறார்...
          அவரை நீங்கதான் எப்படியாவது கண்ட்ரோல் பண்ணனும் சாமி!

கடவுள்: “சொர்க்கத்துக்கு சிமெண்ட் ரோடு வேணுமா....
          இல்ல தார் ரோடே போதுமா மங்குனி

மங்குனி:அவ்வ்வ்வ்வ்.....

டிஸ்கி: மாவு புளிக்க புளிக்கத்தான் தோசை நல்லாருக்குமாம்...
        மனுசனப் படிக்கப் படிக்கத்தான் வாழ்க்கை நல்லாருக்குமாம்....
        
யாரங்கே பல்லக்கு தயாரா!...........விடு ஜூட்........



         
           


18 comments:

வெங்கட் said...

// ”அவர் வெங்கட் தொல்லை தாங்கமுடியாம முந்திரிகாட்டுக்கு தவம் புரிய சென்றுவிட்டார் மன்னா” //

ஹி.,ஹி., ஹி..

இது நடந்தது நைட் 8 மணிக்கு
முன்னாடியா..?

Unknown said...

@வெங்கட்

வ்ருகைக்கு ரொம்ப நன்றி வெங்கட்..
கண்டிப்பா அது 8 மணிக்கு முன்னாடியாத்தான் இருக்கும்,, இந்த மங்குனி ஒழுங்க தர்பாருக்கு வர்தே இல்ல...வந்தாலும் 8 மணிக்கு முன்னாடியே அரசவைய விட்டு கிளம்பிட வேண்டியது இருக்கட்டும்..இருக்கட்டும்..யாரங்கே....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வெங்கட் தொல்ல இங்க வர வந்துடுச்சா........

Unknown said...

வாங்க பன்னிக்குட்டி வாங்க.. என்னோட தர்பாருக்கு நீங்க வந்ததுக்கு ரொம்ப ரொம்ப நன்றி...யாரங்கே இன்று முதல் இந்த பன்னிக்குட்டி என் அரசவை உறுப்பினராகிவிட்டார்..அவருக்கு வேண்டிய சகலவிதமான வசதிகளையும் செய்து தாருங்கள்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வெங்கட் சொன்னது…
// ”அவர் வெங்கட் தொல்லை தாங்கமுடியாம முந்திரிகாட்டுக்கு தவம் புரிய சென்றுவிட்டார் மன்னா” //

ஹி.,ஹி., ஹி..

இது நடந்தது நைட் 8 மணிக்கு
முன்னாடியா..?///////

8 மணிக்கப்புறம் மங்கு எங்கே எப்படி இருப்பார்னு அவருக்கே தெரியாதோ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்த வெர்ட் வெரிஃபிகேசனை எடுத்துட்டா என்ன?

Unknown said...

@ பன்னிக்குட்டி
///இந்த வெர்ட் வெரிஃபிகேசனை எடுத்துட்டா என்ன?//

எதை சொல்றீங்க எனக்கு புரியவில்லையே...இந்த மங்குனி அமைச்சர் எங்கு போய் தொலைந்தார் என்று தெரிய வில்லையே...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கமெண்ட் சப்மிட் பண்ண உடனே இங்க்லீஷ் வெர்ட் அடிக்க சொல்லுதே,அத சொன்னேன்

Unknown said...

@பன்னிக்குட்டி

//இந்த வெர்ட் வெரிஃபிகேசனை எடுத்துட்டா என்ன?
கமெண்ட் சப்மிட் பண்ண உடனே இங்க்லீஷ் வெர்ட் அடிக்க சொல்லுதே,அத சொன்னேன்//

நான் சரிசெய்து விட்டேன்...இனிமே வேர்டு வெரிஃபிகேஷன் வராது...

ரொம்பநன்றி பன்னிக்குட்டிசார்....

குறையொன்றுமில்லை. said...

செந்தில் சூப்பர் கொசுத்தொல்லை வைத்து ஒரு பதிவா. ம்ம்ம் நடக்கட்டும்.

கோலா பூரி. said...

ஃப்ரெண்ட் குட் நல்லா இருக்கு சீக்கிரமே அடுத்தடுத்து பதிவு போட்டுட்டீங்க. நிறையா பேரும் வராங்க. சந்தோஷமா இருக்கு. வாழ்த்துக்கள்.

Unknown said...

@லஷ்மிமா ரொம்ப நன்றி...

@கோமு - நன்றி ஃப்ரெண்ட் கண்டிப்பா விரைவில் பதிவு போட்டுறேன் - நேரம்தான் கிடைக்கமாட்டேங்குது...

பால கணேஷ் said...

விறுவிறுப்பாகவும் ரசிக்கும் படியும் பதிவுகள் போடுகிறீர்கள். வாழ்த்துக்கள்...

Unknown said...

@கணேஷ் சார்....உங்கள் அழகுத்தமிழுக்கும் நன்றி....தொடர்ச்சியாக கருத்துரை பகிர்ந்தமைக்கும்... நன்றி....

Mohamed Faaique said...

எனக்கும் சுவர்க்கத்துக்கு ஒரு ரோட் ஓடர் பண்ணனுமே!!!

Unknown said...

@Mohamed Faaique
\\எனக்கும் சுவர்க்கத்துக்கு ஒரு ரோட் ஓடர் பண்ணனுமே!!\\

அதுக்கு நீங்க மங்குனி மாதிரி வெங்கட்கிட்ட அடிவாங்கனும் பாஸ் பரவாயில்லியா

ADMIN said...

இம்புட்டு நாளா எங்க இருந்தீங்க எம் மண்ணா?!!

இல்லை இல்லை மன்னா!?

மன்னா என்று தானே அழைத்தேன் தர்ம பிரபு.

தங்கள் காதில் மண்ணன் என்று விழுந்துவிட்டதோ?

ஒரு சுழிதானே வித்தியாசம்..ஒத்துப்போவீர்கள் என்றே நம்புகிறேன்..

நாடு நாசமாக போக உன் ராஜ தர்பார் நடக்கட்டும்.. நடக்கட்டும்..

Unknown said...

@தங்கம்பழனி :
\\நாடு நாசமாக போக உன் ராஜ தர்பார் நடக்கட்டும்.. நடக்கட்டும்..\\

ஆகா அருமை அருமை....இருந்தாலும் இவ்வளவு புகழ்ச்சி எனக்கு கொஞ்சம் அதிகம்...இருக்கட்டும் இருக்கட்டும்...