மன்னன்: “வணக்கம் அமைச்சரே! நாட்டில் மாதம் மும்மாரி மழை பொழிகிறதா மங்குனி அமைச்சா”
மங்குனி: மனதில் “ம்க்கும்... இதகூட என்கிட்டேயேகேக்கிறானா இந்தலூசு மன்னன்” என்று நினைத்தபடியே... “என்ன மன்னா வெளிநாடு ஏதாச்சும் சென்று வந்திர்களா என்ன?”
மன்னன்: என்ன மங்குனி கிண்டலா நான் அரசன்அப்படித்தான் கேட்பேன்!
மங்குனி: மன்னிக்கவும் மன்னா...அரசவையில் இன்றைய விவாத்த்தின் தலைப்பே வித்தியாசமா இருக்கே மன்னா!
மன்னன்: ஆமாம் மங்குனி...வர வர நம்மக்களில் பலர்“கரும்பு கரும்பாக இருந்தால் எறும்பு எங்கிருந்தாலும் வரும்” என்கிற நினைப்பில் பொழப்பை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்... அவர்களுக்கான தகுதியை அவர்கள் உருவாக்கிக் கொண்டார்கள், சரி. ஆனால், அவர்களுக்கான இடத்தை அவர்களால் கேட்டுப் பெற முடிகிறதா? அவர்களுக்கான வெகுமதியை அவர்களால் கேட்டுப் பெற முடிகிறதா? அவர்கள் வளர்ச்சிக்கான திசைகளை அவர்களால் தேடிப் பிடிக்க முடிகிறதா? மக்கள் இன்று கேள்வி கேட்பதையேமறந்துகொண்டு இருக்கிறார்கள் மங்குனி! இது எனக்கு பெருங்கவலையாக உள்ளது மந்திரி!
மங்குனி:ஆமாம் மன்னா! இப்போதெல்லாம்மக்களுக்கு சரியாக கேள்விகேட்ககூட தெரியவில்லை மன்னா! பொதுவாக ஒன்றை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். அது என்னவென்றால் குழந்தைப் பருவத்தில் நம்மிடமிருந்துவெளிப்படும் இயல்புகளை, வயதாக வயதாக, உரியபக்குவத்துடன் வளர்த்து வரும்போது அது நமக்குப்பலவகைகளில் உறுதுணையாய் இருக்கிறது...அதில் ஒன்றுதான்கேள்வி கேட்கிறகுணம்..
மன்னன்: ஆம் மந்திரியாரே! தனக்கு என்ன தேவையோ, அதை வெளிப்படையாய்க் கேட்கிற குணம் ஒவ்வொரு குழந்தையிடமும்உண்டு. சில வேளைகளில் பொறுமையில்லாத பெற்றோர்களோ,ஆசிரியர்களோ, ஓர் அதட்டல் போட்டு, கேள்வி கேட்கும்ஆர்வத்தை முடக்கி விடுகிறார்கள். அப்படி யாரேனும் இனிசெய்தால் அவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் மந்திரியாரே!
மங்குனி:நல்லது மன்னா! தன்னுடைய தேவைகளைக் கேட்டுப் பெறுவது என்பதும், தெரியாத ஒன்றைக் கேட்டுத் தெரிந்து கொள்வது என்பதும், நமது வெற்றிக்கான அடிப்படை தேவைகள்என்பதை நம் மக்கள் கண்டிப்பாய் புரிந்து கொள்ளவேண்டும்மன்னா! ‘அழுத பிள்ளை பால் குடிக்கும்’ என்பதை சும்மாவாசொன்னார்கள் நம்முன்னோர்கள்!
மன்னன்: உண்மைதான் மங்குனியாரே! கிடைக்காது என்றமுன்முடிவை தாமாக ஏற்படுத்திக் கொண்டு, எளிதில் கிடைக்ககூடியவற்றைக் கோட்டைவிடுபவர்கள் எத்தனையோ பேர் நம்நாட்டில் இருக்கிறார்கள். இது எனக்கு பெருங்கவலையாகஇருக்கிறது.ஒரு குழந்தையின் இதழ்கள் ஓயாமல் உச்சரிக்கும்கேள்விகளைத் தேடிப்பிடித்தால்,யார்-என்ன-எங்கே-ஏன்-எப்படி-எப்போது என்கிற சில சின்ன சின்ன சொற்கள்தான் நம்க்கு கிடைக்கும். தீர யோசித்தால், உலகின் எல்லாக் கேள்விகளுமே இந்த ஆறுசொற்களுக்குள் அடங்கி விடக் கூடியதுதான், மந்திரியாரே“இந்த மாமா யார்?” என்று கேட்கும் ஒரு குழந்தையில் தொடங்கி,”நான் யார்” என்று கேட்கச் சொன்ன ரமண மகரிஷியின் வழிகாட்டுதல் வரை எல்லாமே கேள்விகளின் முக்கியத்துவத்தைத்தான் நமக்கு காட்டுகிறது மந்திரியாரே!
மங்குனி:முற்றிலும் உண்மை மன்னா! எனவே மக்களே கேள்விகேட்க பழகிக்கொள்ளுங்கள் அதன் மூலம் வாய்ப்புகளைவாய்விட்டு கேளுங்கள்! வாய்விட்டுக் கேட்பவை மட்டுமே வாய்ப்புகளைப் பெறுவதற்கான வழி. எங்கெல்லாம் வாய்ப்புகள்இருக்கின்றன என்ற தேடல் எப்போதும் இருப்பவர்களே ஜெயிப்பவர்கள்.
மன்னன்: ஆம் மக்களே நீங்களும் ஜெயித்து என் நாட்டையும்வளப்படுத்துங்கள்...வேறு ஏதேனும் செய்திகள் உண்டா மங்குனி!
மங்குனி:ஆம் மன்னா நம் விஞ்ஞானிகள் அடுத்த வாரம் நம்நாட்டில் பூகம்பம் வந்தாலும் வரும் என்று எச்சரிக்கை செய்துள்ளார்கள் மன்னா!”
மன்னன்: ஓ அப்படியா பரவாயில்லை பார்த்துக்கொள்ளாலாம் மங்குனி!
மங்குனி:கூடவே சுனாமி வந்தாலும் வருமாம் என்றும் எச்சரிக்கை செய்துள்ளார்கள் மன்னா!
மன்னன்: அதெல்லாம் ஒரு மேட்டரா மங்குனி!
மங்குனி:அடுத்தவாரம் டெரர்கும்மியிலிருந்து
“கோமாளியும் சிரிப்புபோலிசும்”
நம் நாட்டிற்கு மொக்கபோட வரப்போவதாக செய்தி வந்திருக்கிறது மன்னா!
மன்னன்: ஐயோ ஆண்டவா....என்நாட்டை நீதான் காப்பாத்தணும் கடவுளே!!!!!!!!
14 comments:
என்னாச்சின்னு தெரில்ல அலைன்மெண்ட் கன்னாபின்னான்னு ஆயிருக்கு.....
குழந்தைகள் தான் எதையும் ஏன் எதற்கு என்று கேள்வி கேட்டவாரே இருக்கிரார்கள். நமக்குத்தான் சரியான பதில் தெர்யல்லே.
அடங்கொன்னியா.........
@ லஷ்மிமா- இந்த மன்னன் கண்டிப்பாக உங்கள் கருத்தினை ஆமோதிக்கிறேன்.....நானும் உங்கள் வலைப்பதிவொன்றில் உங்கள் பேரன் உங்களிடம் கேட்டகேள்விகளை நீங்கள் பதிவிட்டதை நான் படித்திருக்கிறேன்....
// என்னாச்சின்னு தெரில்ல அலைன்மெண்ட் கன்னாபின்னான்னு ஆயிருக்கு..... //
Go to Dashboard -> Settings - > Global Settings
Choose " Old Editor " and try Alignment..
அடடா, நான் ரொம்ப லேட்டா வந்துட்டனோ? ஃப்ரெண்ட் நகைச்சுவை சூப்பரா வருது உங்களுக்கு கண்டின்யூ. ஆல் த பெஸ்ட்.
@ பன்னிக்குட்டி
\\அடங்கொன்னியா.........\\
பன்னிக்குட்டி பாராட்டுதா இல்ல திட்டுதான்னே தெரில்லேயே
@ வெங்கட்
ரொம்ப நன்றி வெங்கட் சார்..
@ கோமு
ரொம்ப நன்றி ஃப்ரெண்ட்...பாத்திங்களா என் ப்ளாக் பாக்க மறந்துட்டிங்கபோல... ஆனால் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கீங்க....
கேள்விகளால் வேள்வி செய்யச் சொல்லி வைரமுத்து சொன்னார். நீங்களும் அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
@கணேஷ் சார்,
வாய்விட்டுக் கேட்பவை மட்டுமே வாய்ப்புகளைப் பெறுவதற்கான வழி. எங்கெல்லாம் வாய்ப்புகள் இருக்கின்றன என்ற தேடல் எப்போதும் இருப்பவர்களே ஜெயிப்பவர்கள். “பூமி பொதுச்சொத்து! உன் பங்கு தேடி உடனே எடு!” என்கிறார் கவிஞர் வைரமுத்து. நீங்கள் ஒரு நல்ல ஆர்வமுள்ள தமிழ் படிப்பாளி என்பதை மீண்டும் நிருபித்துவிட்டீர்கள் ரொம்ப ந்ன்றி சார்....
///கிடைக்காது என்றமுன்முடிவை தாமாக ஏற்படுத்திக் கொண்டு, எளிதில் கிடைக்ககூடியவற்றைக் கோட்டைவிடுபவர்கள் எத்தனையோ பேர் நம்நாட்டில் இருக்கிறார்கள்///
கேள்வி கேட்க வெக்கப்படுவோர், சிறந்த விஷயங்களை ஒரு நாளும் அடைய முடியாது. கேள்வி அறிவின் வாசல்
கடைசி பன்ச் சூப்பர்..
@Mohamed Faaique
பாஸ் தொடர்ச்சியா கருத்தப்போட்டு பின்னிட்டிங்க பாஸ்..ரொம்ப நன்றி பாஸ்
Post a Comment